உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடம்!

Wednesday, July 5th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் கடந்த ஆண்டு இதே பட்டியலில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 2.136 சுட்டெணுடன் 107 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் பூகோள சமாதான சுட்டியை தயாரித்துள்ளனர்.

இவ்வருடத்திற்கான குறித்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ள அதே நேரம் ஆப்கானிஸ்தான் இறுதி இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலகின் முதல் 10 அமைதியான நாடுகள்

ஐஸ்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரியா, சிங்கப்பூர். போர்த்துக்கல், ஸ்லோவேனியா. ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகியன இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வர...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் - உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வ...
பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம...