உலகநீர் தினத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெடுந்தீவு மக்கள் நன்றிதெரிவிப்பு

Wednesday, March 23rd, 2016

சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் நீண்டகாலமாக உரியதீர்வுகாணப்படாமல் இருந்துவந்தநிலையிலும் கிடைக்கப் பெறுகின்றநீர் தேவைக்குபோதுமானதாக இல்லாதநிலையிலும் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக இன்று நாம் சுத்தமானகுடிநீரைப் பெற்றுவருகின்றோம் என நெடுந்தீவுப் பகுதிமக்கள் மகிழ்ச்சிதெரிவித்துள்ளனர்.

உலகநீர் தினம் நேற்றையதினம் கடைப்பிடிக்கப்பட்டநிலையில் நெடுந்தீவுமக்கள் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளனர்

நெடுந்தீவில் சுத்தமானகுடிநீரைப் பெற்றுக்கொள்ளக் கூடியதானநீர் நிலைகள் இல்லாதநிலையில் அவற்றினூடாக உவர் நீரையே நாம் பாவிக்கவேண்டிய துர்ப்பாக்கியத்துடன் வாழ்ந்துவந்தோம்.

இந்நிலையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு நெடுந்தீவு மக்களாகிய நாம் கொண்டுவந்திருந்ததுடன் சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தோம்.

அதனடிப்படையில் உவர் நீரைநன்னீராக்கும் செயற்றிட்டத்தினூடாகவே நெடுந்தீவு மக்களாகிய எமக்கு தற்போது பொருத்தமானதும் பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள அரியசந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இத்திட்டத்திற்காக தங்களது பெருமுயற்சியின் பயனாக ஜப்பானிய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்க நிதியுதவியுடன் 57 மில்லியன் ரூபாசெலவில் செலவிடப்பட்டுள்ள அதேவேளை இதனூடாக ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுவருகின்றோம்.

அந்தவகையில் எம்மீது அக்கறைகொண்டு இப்பாரிய உதவித்திட்டத்தை கிடைக்கச் செய்த தங்களது சேவைக்கு நெடுந்தீவு மக்களாகிய நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களே என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Related posts: