உற்பத்தி துறை வீழ்ச்சி – பிரதமர் ரணில்!

Sunday, September 3rd, 2017

2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் மேல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்ற போது இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 17 சதவீதமாக காணப்பட்டது.

தற்போது அது 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் இலவச சேவைகளை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தில் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: