உறுப்பினர்கள் வரவின்மையால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு!

Thursday, September 6th, 2018

நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்காமையால் சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் இன்று காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. சபைக்கு 14 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்தனர்.

சபையைக் கூட்டுவதற்கு குறைந்த பட்சம் 21 உறுப்பினர்கள் அவசியம். இதனையடுத்து சபை அமர்வுகள் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related posts: