உறுப்பினர்களது விபரம் அடங்கிய வர்த்தமானி வெளியிடலில் தொடர்ந்தும் தாமதம்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானியில் அறிவிக்கும் நடவடிக்கைக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என அரச அச்சகக் கூட்டுத்தாபன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றங்கள் 340 இற்கும் தெரிவான 8,600 உறுப்பினர்களின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அச்சிடல், எழுத்துப் பிழைகளை பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதனால் பெயர்களை வெளியிடும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, பெயர்களை சரிபார்க்குமாறு கோரி ஆவணங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிழைகள் திருத்தப்பட்டதன் பின்னர் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|