உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை- அலிஸ் ஜி வெல்ஸ்!

இலங்கை அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று, ஐக்கிய அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்தநாட்டின் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஆசிய நாடுகள் தொடர்பான துணைக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் யாப்பு மறுசீரமைப்பு இடம்பெற்றிருக்கவில்லை.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இவ்வாறு பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக கடந்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் தொடர்ச்சியாக அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் !
8000 பேருக்கு சம்பளம் வழங்கினால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜி...
மார்ச் 19 வரை 76 247 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வ...
|
|