உறவினர் வீடுகளுக்கும் அயல் வீடுகளுக்கும் செல்வதையும் தவிருங்கள் – இராணுவ தளபதி வலியுறுத்து!
Monday, May 3rd, 2021விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலும் நடத்த முடியாது என இராணுவ தளபதியும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் வீடுகளிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங்களை நடாத்த அனுமதியில்லை என கூறியிருக்கும் இராணுவ தளபதி கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை அத்தியாவசிய தேவையில்லாமல் அயல் வீடுகளுக்கு செல்வது, உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் உறவினர்களை அழைப்பதையும் நிறுத்துமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம்!
இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் - இந்திய...
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவ...
|
|