உர நிவாரணத் தொகையை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்!

பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான உர நிவாரணத் தொகையை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யும் நடைமுறை நாளை ஆரம்பமாகிறது என விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித் சந்திர பியதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகு விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிக்கையில் – அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் வைப்பீடு செய்யப்படும். இந்த நடைமுறையில் பணத்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்பட மாட்டா தென்றும் கூறினார்.
இம்முறை போதிய மழை பெய்யாத காரணத்தால் பெரும்போக பயிர்ச் செய்கை தாமதமாகியிருந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, கம்பஹா ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து மாத்திரமே பயிர்ச் செய்கையை ஆரம்பித்த விவசாயிகளின் பட்டியல்கள் கிடைத்ததாக மேலதிக செயலாளர் கூறினார். நிவாரணத் தொகைக்குரிய பணத்தை வைப்புச் செய்யும் நடைமுறை எதிர்வரும் 31ம் திகதிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Related posts:
|
|