உருளைக்கிழங்கு செய்கை மானியம் பெறுவதில் யாழ்.விவசாயிகள் ஆர்வம்

Sunday, November 26th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கான அரை மானியத்தைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்று மாவட்டச் செயலக விவசாயப்ப பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கான அரைமானியம் வழங்குவதற்கு கொழும்பு அரசு தீர்மானித்தது. உருளைக்கிழங்கு செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக விவசாயி ஒருவர் மேற்கொள்ளும் செய்கைக்கு ஏற்ப அதற்கான மொத்தப் பெறுமதியின் அரைவாசிப் பணத்தை அரசு வழங்கி விதை உருளைக்கிழங்கை பெற்றுக் கொடுக்கும் ஒரு திட்டமாகும்.

அதன் படி யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு சங்கத்தின் ஊடாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவிற்கு செய்கையாளர்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் முதல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசெம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்தப் பதிவுகளை மேற்கொள்ளமுடியும்.

கடந்த இரண்டு நாள்களில் 183 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த முறை ஆயிரத்து 300 விவசாயிகள் இந்தச் செய்கையை மேற்கொள்வதற்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான விதை உருளைக்கிழங்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கிலோவுக்கான உருளைக்கிழங்கு அரைமானியமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: