உரிய முறையில் பயன்படுத்தினால் மழை நீரே பிரச்சினையைத் தீர்க்கும்  வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Friday, March 16th, 2018

யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் கிடைக்கும் மழை நீரை உரிய முறையில் பயன்படுத்தினால் எமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை இலகுவாகப் பெற முடியும் . இவ்வாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளார் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீர்வளம் தொடர்பாக யாழ்ப்பாணம் தொண்டமனாறு நீர்ப்பாசனத்திணைக்கள அலுவலகத்தில் அணைக்கட்டின் பாதுகாப்புத் மற்றும் நீர் வடிகால்கள் உத்தேச திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்  கலந்துரையாடல் நடைபெற்றது அதிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் தெரிவித்ததாவது –

யாழ்ப்பாணத்ததைப் பொறுத்த வரையில் கடலில் இருந்து நில மட்டம் 12 மீற்றரே உயரமானது இலங்கையில் பல ஆறுகள் காணப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் ஆறுகள் எவையுமே இல்லை.

யாழ்ப்பாணத்திற்கு வடாரம் ஒன்றிற்கு அண்ணளவாக ஆயிரத்து 250 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கின்றது அதில் 30 வீதமான நீர் கடலுக்குச் செல்கின்றது 50 வீதமான நீர் ஆவியாகின்றது .

மிகுதி 20 வீதமே நிலத்துக்கு கீழே போகின்றது எமக்குக் கிடைக்கின்ற மழை நீரை உரிய முறையில்  சேமிக்கும் திறனைக் கொண்டு வந்தால் எமது மாவட்டத்தின் நீர் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும்.

எமது நீர் வளத்தை  தக்க வைக்க நீரேரிகள் ஊடாகவே சேமிக்க முடியும் அதனாலேயே யாழ்ப்பாணத்தில் போரால் பாதிக்கப் பட்ட நீரேரிகளை மீளமைப்புச் செய்கின்ற பணிகளை நாம் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றோம்.

கனகராயன் குளத்திலிருந்து நீரைத் தேக்கி குடி நீர் தேவைக்கு மட்டும் குழாய்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மழை நீரை தேக்கி குடி நீர் தேவைக்கு மட்டும் குழாய்கள்  ஊடாக  வழங்க  நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மழைநீரை பொதுமக்கள் உரிய முறையில் சேமிப்பார்களாயின் எமது நீர் வளத்தை பாதுகாக்க முடியும் எமக்குக் கிடைக்கும் மழை நீரை கடலுக்குள் கலக்க விடாது உரிய முறையில் சேமித்து வைப்பதற்கான முறைகள் ஊடாக நீர் பற்றாக் குறையில் இருந்து எம்மால் மீள முடியும் என்றார்.

யாழ்ப்பாணத்தில்  கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டமணாறு உவர்நீர்த்  தடுப்பனை உள்நாட்டு போர் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் பழுதடைந்த நிலையில் நன்னீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலையில் காணப்பட்டது

மகாவலி அமைச்சின் கீழ் உலக வங்கியின் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தொண்டமனாறு தடுப்பனைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன தடுப்பனைகளை அமைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புத் தூண்கள் மூங்கில் குற்றிகளுக்கு பதிலாக துருப்பிடிக்காத உலோகங்களைப் பயன்படுத்தி வேலைத்திட்டம் நடைபெறுவதால் இந்தத் தடுப்பணைகள் சுமார் ஜம்பது வருடங்களுக்கு மேல் பாதுகாப்பாக இருக்குமென   எதிர்பார்க்கப்படுகின்றது   தொண்டமனாறு நீரேரி ஆறு பல பிரதேசங்களுக்குத் தேவையான நன்னீரைச் சேமிக்க முடியும் இந்தத் தடுப்பணை ஊடாக வடக்கு மாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப் படுவதுடன் நன்னீர் வளத்தைப் பெருக்க முடிவதுடன் விவசாயத்துக்குத் தேவையான பெருமனவிலான நீர் வளத்தை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர் பார்க்கப்படுகின்றது .

Related posts: