உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் –ஹர்த்தால் – தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவிப்பு!

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று (10) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது
000
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை பெப். 4 ஆம் திகதி கையளிப்பு!
அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தில் !
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்ற அதிகாலை நாடு திரும்பினர்!
|
|