உரிய சேவைகள் கிடைக்காத நோயாளர்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்குமாறு கோரிக்கை!

அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளர்களுக்கு சில வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருந்து வகைகள் உட்பட சகல வசதிகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கை விஜயம்!
இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தத் திட்டம் ?
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
|
|