உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் அரசுடைமை!

Saturday, August 20th, 2016

உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட்டதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டமுள்ள ஒரு நாட்டில் எவருக்கும் உரிமையற்ற சொத்துக்கள் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. உரிமை கோராமல் இந்தப் பணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று 18.08.2016 நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.. தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளின் எண்ணக்கருவை வலுவூட்டுவதற்கு சட்டம் உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டுக் குழு தமது கருத்தை முன்வைப்பதற்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்தாது குழப்பம் விளைவிப்பதில் காலத்தை செலவிட்டனர். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்தை புறந்தள்ளியதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Related posts: