உரிமைப் போராட்டத்தை தோழமையுடன் வளர்க்க அயராது உழைத்தவர் அமரர் மங்கையர்க்கரசி அம்மையார் –ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பிரதி அமைப்பாளர் ஜீவன்
Monday, March 21st, 2016மதிக்கப்படவேண்டிய தலைவர்களை மறந்தும், அவர்களது மக்கள் பணிகளை திரிவுபடுத்தி தவறான அரசியல் வியூகங்களை மக்களிடம் திணிப்பதுமே தமிழர் அரசியல் வரலாற்றின் துயரமாக இன்றுவரை இருந்துவருகின்றது. இத்தகைய தவறான அரசியல் வரலாற்று பதிவுகளால் தான் நாம் ஒரு திடமான அரசியல் உரிமைகளுடன் கூடிய வரலாற்றை இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியாத இனமாக இருப்பதற்கு காரணமாக அமைகின்றது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன்(ஜீவன்) தெரிவித்தள்ளார்.
மறைந்த, முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் துணைவியாரது இறுதி அஞ்சலி நினைவு கூட்டம் வட்டுக்கோட்டையில் நேற்று(21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அஞ்சலி உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
ஈழ விடுதலைப் போராட்டத்தை தோழமையுடன் கூடிய ஒரு தூர நோக்கத்திற்காக வளர்ப்பதற்கு தங்களை அர்ப்பணித்தவர்களுள் அம்மையார் மங்கையர்க்கரசியின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது.
அரசியலில் நீடித்தநாள் பகைமைகள் இருப்பதில்லை. இருந்தும் அம்மையாரின் இறுதி அஞ்சலி நினைவுக் கூட்டத்தில் பல தலைவர்களது பிரசன்னங்களை காணமுடியாதிருப்பது வேதனையளிக்கின்றது. எமது கட்சி கடந்து வந்த பாதையை என்றும் மறந்ததுகிடையாது. அந்தவகையில் தமிழ் போராட்ட தலைவர்களுள் இன்றும் கொள்கை மாறாது மக்களுக்கான பணிகளை செய்துவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாகவும் அம்மையாரின் ஒரு மகனாகவும் இன்று இந்த அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொண்டுள்ளோன். அம்மையார் லண்டனில் மரணித்தாலும் வட்டுக்கோட்டையில் நடைபெறும் அம்மையாரது நினைவஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு எமது கட்சியின் சார்பிலான இறுதி அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த இடத்தில் நான் சில நினைவுகளை கூற நினைக்கின்றேன் –
மறைந்த தலைவர்களை நினைவு கூரும் வகையில் தேசியத் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு ஒரு சிலையை அமைப்பதற்கு நான் வலி.மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவந்தேன். ஆனால் அதை அமைப்பதற்கு அன்று பிரதேச சபையை ஆளுகைக்குட்படுத்தியவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. அதனால் எனது அந்த முயற்சி இன்றுவரை கிடப்பில் கிடக்கின்றது.
எமது வரலாற்று தலைவர்களுக்கு ஒரு நினைவிடத்தை அமைப்பதற்கு முயற்சிக்காதவர்கள் இன்று போராட்டத்தை வைத்து நயவஞ்சக அரசியல் செய்கின்றார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களையும் அவர்களது அரசியல் நகர்வுகளையும் மையப்படுத்தி உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகள் தான் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது. இதனால் அன்று பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தோழமையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் ஒரு சிலரது தவறான பயணிப்பால் மக்களுக்காக உழைத்த பல போராட்ட இயக்கங்களின் தலைவர்களை நாம் இழந்துவிட்டோம்.
தமிழர் உரிழமையை வலியுறுத்திய போராட்ட தலைவர்களுள் மங்கையர்க்கரசி அம்மையாரின் பங்களிப்பும் உன்னதமானதாக உள்ளது. அம்மையார் இன்று காலனின் பிடிக்கள் சிக்கண்டு இறையடி சேர்ந்தமை எமக்கெல்லாம் ஈடுசெய்யமுடியாத இழப்பாகவே அமைந்துள்ளது.
மக்களை நேசித்த தலைவர்கள் பலரை தமிழ் மக்கள் இழந்தாலும் ஆரம்ப காலம் தொடங்கி இன்றுவரை மக்கள் பணிகளை ஓய்வின்றி ஆற்றிவரும் போராட்டங்களின் ஸ்தாபகர்களில் ஒருவருமான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் கீழ் இன்றும் நாம் மக்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்காக போராடி வருகின்றோம். இதனால் அரசியலில் முதிர்ந்த மக்கள் நலன்சார்ந்த உழைக்கும் தலைவர்களைது பணிகளை தூற்றுவதையும் மழுங்கடிப்பதையும் இனியாவது நிறுத்தி மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களை இனங்கண்டு மக்கள் பணியை அவர்கள் மேற்கொள்ள வலுச்சேர்க்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
Related posts:
|
|