உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவுகூரும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் வி.கே. ஜெகன் !

Monday, June 25th, 2018

தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்கங்களினதும் போராளிகளை நினைவுகூரும் முகமாக யாழ் மாநகரப் பகுதியில் நினைவுச் சின்னங்கள் அமைத்து அவர்களை நினைவு கூருவதே மரணித்த உறவுகளுக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளாகிய நாம் செய்யும் மரியாதையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ். மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்றையதினம் நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்.மாநகர சபை பகுதியில் எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் பதிவுகளை அமைக்கவேண்டும் என்ற அக்கறையுடன் நாம் பல திட்டங்களை கடந்தகாலங்களில் முன்னெடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம்.

அந்தவகையில் யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்படவுள்ள நினைவுச் சின்னங்கள் அமைக்கும் விடயத்தை நாம் வரவேற்பதுடன் கடந்தகாலங்களில் எமது இனத்தின் உரிமைக்காக போராடி மரணித்துப்போன அனைத்து இயக்கங்களினதும் போராளிகளையும் நினைவு கூரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்தவகையில் எமது மக்களின் வரலாறுகளையும் அதுதொடர்பான பதிவுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல நாம் உழைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts: