உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளஅமைச்சர் நாமல் ராஜபக்ச மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் போராட்டங்களில் வெற்றிபெறுவதற்கும் தொழிற்சங்கங்களிற்கு உரிமையுள்ளது.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்றால் அதனை உண்மையான தொழிற்சங்க போராட்டம் என அழைக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாணவர்களிற்கு கல்வி புகட்டுவது தேசிய போராட்டம் என தெரிவித்துள்ள அவர், ஆசிரியர்கள் அவ்வாறான பொறுப்பை கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெண்களுக்கு தனி ஒதுக்கீடு – புகையிரத திணைக்களம் அதிரடி!
தேசிய உரக் கொள்கை திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு - அமைச்சரவை அனுமதி!
புதிய அரசாங்கத்தில் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்பு !
|
|