உரம் வழங்கியமை உறுதிப்பாட்டின் அடையாளமாகும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம், 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம் தாங்கிய கப்பல் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த உரமானது, யு.எஸ் எய்ட் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இது இலங்கைக்கு உதவியளிக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு வரையறை!
டெங்கு நோய் வைரஸ் வீரியமிக்கதாக காணப்படுகின்றது
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் - ஜனாதிபதி முன்மொழிவு!
|
|