உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது!

Monday, July 3rd, 2017

 

உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது என்று இராஜாங்க அமைச்சர்  பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இங்கினிமிட்டிய நீர்ப்பாசனத் திட்டத்தின் இடதுபக்க அணையின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

தற்போது சீர்குலைந்துள்ள நீர்ப்பாசனச் செயற்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் விவசாயத்துறை விருத்தி காண வேண்டுமானால் நீர்ப்பாசனத்துறை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இராஜாங்க அமைச்சர்  பாலித ரங்கே பண்டார  அங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts: