உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய விவசாய அமைச்சர் நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

தற்போதைய தேவைக்கு ஏற்ப 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் ஆண்டு உரச் சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி உர உற்பத்தி, தயாரித்தல், இறக்குமதி, விநியோகம் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த விதிமுறைகள் 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இழக்க உரச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சட்டத்தின் சில விதிகள் போதுமானதாக இல்லை என்பதுடன் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டிருந்தது. குறிப்பாக, இயற்கை உரங்களை முழுவதுமாக நாட்டில் செயற்படுத்த, சட்டத்தில் தொடர்புடைய விதிகளை உள்ளடக்க வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாழ்வாதார நீருக்காக உடையார் கட்டில் போராட்டம்!
கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!
இலங்கை - உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ...
|
|