உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Sunday, October 30th, 2022நாடளாவிய ரீதியாக மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அத்தியாவசியமான 384 மருந்து வகைகளில் சில மருந்துகளுக்கும் சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் சில உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் அவற்றை எதிர்வரும் ஒன்றரை மாதங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் உயிர்பாதுகாப்பு மருந்துகள் 14 வகைகள் உள்ளன. அவை தற்போது உள்ளதோடு அவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் ஏனைய சில மருந்துகளுக்கும் சில சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆனாலும் அவற்றை ஈடு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு நிதியமைச்சு உட்பட சகல தரப்பினரும் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|