உயிர்ப்பாதுகாப்புள்ள சிறந்த 34 நாடுகளில் இலங்கைக்கும் இடம்!
Tuesday, November 7th, 2017உலகில் 140 நாடுகளில் சுகாதாரசேவை உயிர்பாதுகாப்புள்ள சிறந்த 34 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக உலகளாவிய பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பெண்கள் /ஆண்கள் சமூக நிலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. The Global Gender Gap Report 2017 என்ற அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வைத்திய நிர்வாகத்தினரின் சங்கத்தின் அறிவியல் கூட்டத்தொடர் கொழும்பு கிங்ஸ்பெறி ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் விபரித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், இந்த உன்னதமான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியின் தலைமைத்துவமே காரணமாகும். இதனை பாராட்டுவதாக தெரிவித்த அவர். இந்த வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக வைத்திய நிர்வாகத்தினர் பெரும் பங்களிப்பு வழங்கினர்.
வைத்தியத்துறை நிர்வாகத்தினர் விடுமுறை தினத்தை கவனத்தில் கொள்ளாது சேவையை வழங்கியமையே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|