உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 27th, 2021உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 5 மேல் நீதிமன்றங்களில் 9 வழக்குகள் இடம்பெறுவதாகவும் 24 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்து சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இனிமேல் அவரின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|