உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அரசாங்கத்திடம் 50 கோடி நாட்டயீடு கோரியுள்ள சட்டத்தரணி!

Thursday, July 11th, 2019

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி சங்ரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவர், அரசாங்கத்திடம் 50 கோடி ரூபாய் நட்டயீடு கேட்டு உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்குதல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுவில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 44 பேர் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்த முழுமையான தகவல்களை முன்னரே அறிந்திருந்த போதும், அலட்சியத்தால் இந்த தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனதால், நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாக தெரிவித்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதவேளை, குருநாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபி தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணை குருணாகலை நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வைத்தியர் சாபியின் தடுப்புக் காவல் உத்தரவை நிறைவு செய்வது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாடு இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.