உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, February 18th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் நபர்களை அறிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்துக்கொண்டால், தாக்குதலின் பின்னணியில் சர்வதேச அமைப்புகள் எதுவும் இருக்கின்றவா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

நாட்டு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த சர்வதேச அமைப்புகளின் தலையீடுகள் இருக்குமாயின் அதனை தடுக்க வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: