உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Monday, February 1st, 2021

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மறைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 15 மாத காலப்பகுதியில் 450 இற்கும் மேற்பட்டவர்களிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சுமார் ஒரு இலட்சம் பக்கங்களை கொண்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: