உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்றையதினம் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அது தொடர்பில் கலந்துரையாட விசேட தினமொன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: