உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் பேரவலம்!
Sunday, April 21st, 2019நாட்டில் ஆறு இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இதுவரை 120இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டும், 1000 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்காக பொதுமக்கள் தேவாலயங்களில் கூடியுள்ளனர். திருப்பலிக்காக பொது மக்கள் அங்கு கூடி ஆராதனையில் ஈடுபட்ட போது இக்கொடூரக் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகளவில் இன்று மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து நன்கு திட்டமிட்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இரத்தப் போக்குக்கு உள்ளாகியிருப்பதனால் அவர்களுக்கான இரத்த தேவையை நிவர்த்தி செய்ய மருத்துவமனைகள் அவசர அழைப்பு விடுத்திருக்கின்றன்.
பொதுமக்கள் கூட்டமாக எங்கும் கூடி நிற்க வேண்டாம் என்றும் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான் இத்தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் தொடர் வெடிப்புச் சம்பவங்களினால் உங்கள் உறவினர்கள் யாராவது காணாமல் போயிருப்பின் அவர்கள் தொடர்பான தகவல்களை கொடுக்குமாறு அவசர தொலைபேசி இலக்கமும் விடுக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் உரிமை கோரத நிலையில், பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
|
|