உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நாட்டு மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக இரணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் வன்முறையை தவிர்த்து அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சுருக்கமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அமைதியை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல்களில் இருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் அனைத்து பொதுமக்களும் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களை நாங்கள் அறிவோம். “நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், அவர்கள் எங்கள் சகோதரிகள், சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் இதுபோன்ற தூண்டுதல்கள், தீ வைப்புத் தாக்குதல்கள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது இந்த பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு உதவுங்கள்.

இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் நமது நாட்டின் இந்த தீர்க்கமான தருணத்தில் அமைதியாக இருந்து எங்களுக்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் வலியுறுத்தினார்.

Related posts: