உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து ஆராய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, January 4th, 2021

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, குழு ஒன்றினை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  

இந்நிலையில் கோரோனா கட்டுப்பாடு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நோய் கட்டுப்பாடு குறித்த முடிவுகளை எடுக்கும்போது மதம், இனம், அரசியல், சமூக மற்றும் புராண நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா தொற்று ஒரு புதிய நோய் என்பதால் உலக சுகாதார அமைப்பின் ஆரம்ப பரிந்துரைகள் மாற்றமடைவதாகவும் இந்நிலையில் இந்த நோய் குறித்து அவ்வப்போது பரிந்துரைகளை வழங்குமாறு நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: