உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா வரையில் உதவி – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2017

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை மீளவும் நிர்மாணிப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு 20 இலட்சம் ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அப்பாந்தோட்டையில் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தம் காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் குடும்பத்துக்கு இதுவரை காலமும் 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.  இந்தத் தொகையை 10 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு கூடுதலான நிவாரணங்களை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரையில் தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்படும் அம்பாந்தோட்டை மாவட்டம் சீரற்ற காலநிலை காரணமாக அழிவுகளைச் சநதித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் வரையில் அரச வாகனங்களைக் கொள்வனவு செய்யத் தேவையில்லை. அந்த சலுகைகள் தற்போதைக்கு அவசியமில்லை என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: