உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !

Sunday, February 24th, 2019

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.

அதன்படி, கடந்த வாரத்தினுள் எண்ணெய் விலை நூற்றுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

ஒபெக் அமைப்பினால் எண்ணெய் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என நிலவும் எதிர்ப்பார்ப்பும் எண்ணெய் விலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளது.

அதன்படி , ப்ரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வார இறுதியில் 67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: