உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்!
Monday, June 14th, 2021மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
குடிநீருக்கு உலைவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் பு...
நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கை - ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...
|
|