உயர் தொழில் நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு சீன வுஹான் பல்கலைக்கழகம் ஆதரவு – சீனாவின் இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021

இலங்கையில் நவீன வேளாண்மை மற்றும் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவ சீனா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி சீனாவின் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பாலித கொஹொன, சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த உடன்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுஹான் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும், சைனா க்ரேட் வில் இண்டஸ்ட்ரியல் கோப்பரேஷன் நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் பேராசிரியர் பாலித கோஹொன வுஹான் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது உப தலைவர்களின் ஷு வின் தலைமையிலான இடைநிலை பல்கலைக்கழக குழு இலங்கையில் நவீன வேளாண்மை மற்றும் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவ பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதித்துள்ளனர்.

பின்னர் ஹூபே ஆளுநருடன் இடம்பெற்ற முறையான கூட்டத்தில் இதற்காக அவரது அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: