உயர் அதிகாரிகளின் ஐரோப்பிய உடையில் மாற்றம் – ஜனாதிபதி!

Tuesday, January 10th, 2017

அரச உயர் அதிகாரிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய உடை தொடர்பான சுற்றறிக்கையை  இரத்துச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் , எதிர்காலத்தில் அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் ‘டை’ மற்றும் ‘கோட்’ அணிவது கட்டாயம் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

60e7665555aed397f245d17f269425d3_L

Related posts: