உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, May 18th, 2020

ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வாரம் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான முடிவை எடுத்தது. இந்த நிலையில் ஆணைக்குழு நாளைமறுதினம் மற்றும் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரங்களுக்காக 35 நாட்கள் அவசியமானவை. இதன்படி ஜூன் 20 என்ற தேர்தல் திகதி சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொதுத்தேர்தல் பெரும்பாலும் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொடருந்து திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக இரத்து - பணிக்கு சமுகமளிக்காத அனைத்து ஊழியர்களிட...
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர...
விவசாயத்துறையை கட்டியெழுப்ப புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டம் - அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக...