உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை – ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிப்பு!

Thursday, April 9th, 2020

பொது தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற கூட்டுவது குறித்து உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள் ஊரடங்கு சட்ட நடைமுறையால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட  நாடாளுமன்ற தேர்தலும் திகதியிடப்படாது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலை எவ்போது நடத்தவது என்பது குறித்து உயர்நீதிமன்றின் ஆலேசனையை பெற்றுகொள்ளுமாறு தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்த நிலையிலேயே கடிதம் ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: