உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Tuesday, May 12th, 2020

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கு அனுமதி கோரும் மாணவர்களிடமிருந்து கல்வி அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற விரும்பும் மாணவர்களுக்கு அற்கான இணையத்தில் விண்ணப்பிக்க இன்று மே 12ஆம் திகதி தொடக்கம் கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து உயர்தரத்துக்கு அனுமதி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

மாணவர் ஒருவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடிவதோடு அனைத்து விண்ணப்பங்களும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்படவேண்டும் என்றும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: