உயர்தர மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ரப் – கல்வியமைச்சர்!

Tuesday, January 8th, 2019

உயர்தர வகுப்பில் பிரவேசிக்கும் மாணவர்களுக்கும் உயர்தர வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வருட இறுதிக்குள் ரப் கணனிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுவரவு செலவுத் திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. குறித்த நிதி மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனை இவ்வருடத்தில் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரப் கணனிகளைப் பெற்றுக்கொடுப்பது தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: