உயர்தர மாணவர்களுக்கு TAB – கல்வி அமைச்சர்!

Sunday, July 1st, 2018

நாட்டின் அனைத்து உயர்தர மாணவர்களுக்கு இலவச  டெப் கணினி வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

டெப் கணினி வழங்கும் ஆலோசனையை முறைப்படுத்தப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தீர்மானத்தின்படி அடுத்த வருடம் முதல் உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: