உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

அத்துடன் குறித்த பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்ததன் பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: