உயர்தர பரீட்சை மண்டப பணிகளில் பல்வேறு முறைகேடுகள்!

நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக கல்வி கல்விசாரா ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சைகள் மண்டப உதவியாளர் தெரிவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதியற்றவர்கள் இவ்வாறு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் இம்முறை பரீட்சை மண்டபங்களில் அதிகம் முறைபாடுகள் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி சேவையில் நிரந்தர சேவையாளர்களாக 25,000 பேர் இருப்பதாகவும், குறித்த கடமைகளுக்காக 3500 பேர் மாத்திரமே தேவையாக காணப்படும் நிலையில் பரீட்சை மண்டபத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தமக்கு விசுவாசமானவர்களையும், தமக்கு தெரிந்தவர்களையும் குறித்த பதவிகளுக்கு நியமித்துள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுதொடர்பில் உடனடியாக கவனத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளரிடம் கல்வி கல்விசாரா ஊழியர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|