உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Friday, April 23rd, 2021

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் செயன்முறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை மார்ச் மாதம் நடந்தேறிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்டத்தை இம்மாதம் 27ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: