உயர்தரம், புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்தவாரம் அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, June 9th, 2020

உயர்தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்தல் வரும் ஆகஸ்டில் நடக்கலாம் என்று கூறப்படுவதால் செப்டம்பரில் பெரும்பாலும் இந்த பரீட்சைகள் நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே நாட்டை அச்சுறுத்திய கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பாடசாலைகள் பூட்டப்பட்டநிலையில் இதுவரை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: