உயர்தரம் கற்கும் பிள்ளைகளுக்கு உதவி!

DSC08724 Friday, April 8th, 2016

யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள யாழ். மாவட்ட உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

விண்ணப்பதாரர் முழுநேர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராக, பெற்றோரில் ஒருவர் யாழ். மாவட்டத்திலுள்ள ஏதாவது கமக்காரர் அமைப்பில் உறுப்பினராகவுள்ள பிள்ளைகள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பிள்ளைகள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்து 2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவராக இருக்கவேண்டும்.

மேற்கூறிய தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் தமது எல்லைக்குட்பட்ட கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் உரிய கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க முடியும்.

இந்த விண்ணப்பப் படிவத்தில் தத்தமது கமக்காரர் அமைப்பினர் சிபாரிசு செய்யவேண்டும் என்பதுடன்  பாடசாலை அதிபர், கிராமஅலுவலர் ஆகியோரின் உறுதிப்படுத்தல் கடிதங்களும் அவசியமானதாகும்.

இந்த புலமைப்பரிசிலுக்கு வறுமை, குடும்ப நிலை, பிள்ளையின் கல்வித் தரம், மீள்குடியமர்வு என்பன கருத்தில் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.


இன்றிலிருந்து பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
இலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு...!
மருந்தகங்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைஇடை நிறுத்தம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
வருட இறுதியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி - மத்திய வங்கி ஆளுநர்