உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த யோசனை!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த வால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதனிடையே போக்குவரத்து செலவுகள் காரணமாக இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் நாட்டம் காட்டுவது குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே நாளாந்த கொடுப்பனவை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் - ஈ.பி.டி.பியின் தவிசாளர...
இலங்கை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் நாட்டில் ஆராய்வு!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் அதிகரிப்பு - 742 பேர் சிகிச்சைக்குள்ளா...
|
|