உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடகளும் பூர்த்தி – 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் பங்கேற்பு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, February 6th, 2022

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை 7 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் குறித்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்

அத்துடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாளை 7 ஆம் திகதிமுதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை, 2 ஆயிரத்து 437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இம்முறை பரீட்சையின் போது 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களில், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

கொரோனா தொற்றுறுதியான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே – அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை திங்கட்கிழமைமுதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி மார்ச் 05 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: