உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, April 9th, 2021இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.
அவ்வாறே ஒக்டோபர் 3 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது
Related posts:
வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வருடார்ந்த தேர் உற்சவம்!
சீகா வைரஸால் உலகில் ரீதியில் இரண்டு பில்லியன் பேர் பாதிப்பு
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
|
|