உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைக்கத் தீர்மானம்!

Wednesday, July 4th, 2018

பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலுள்ள தோட்டப் பாடசாலைகளில் 3,868 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்தவுடன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வே.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: