உயர்தரப் பரீட்சைக்கு 315605 மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

Saturday, June 25th, 2016

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 315605 பேர் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 91 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். மேலும் விசேட தேவைகள் உடைய 195 மாணவ, மாணவியர் இம்முறை உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இந்த மாணவர்களின் தேவைகள் எவ்வாறானவை என அடையாளம் கண்டு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் 2204 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளது

Related posts: