உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!

Thursday, February 22nd, 2018

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாளைய தினத்திற்குள் கிடைக்கக்கூடிய வகையில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.

இதனிடையே கடந்த 20 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: